Connect with us

தலைவருக்கு வில்லனாகும் Animal பட Hero ரன்பிர் கபூர்! இது என்ன Jailer 2 அப்டேட்டா?!

Cinema News

தலைவருக்கு வில்லனாகும் Animal பட Hero ரன்பிர் கபூர்! இது என்ன Jailer 2 அப்டேட்டா?!

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பான கம்பேக் கொடுத்தது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்தது படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் 600 கோடிக்கும் மேல் வசூலிக்க, ரஜினி, நெல்சன், அனிருத் மூவருக்கும் 1.5 கோடி மதிப்பிலான காஸ்ட்லி கார் வாங்கி கொடுத்து பிரமிக்க வைத்தார் கலாநிதி மாறன். அதோடு ஜெயிலர் 2ம் பாகம் உருவாகவும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். இதனையடுத்து தான் ஜெயிலர் 2 ஸ்க்ரிப்ட் வேலைகளை மைசூரில் இருந்து பார்த்து வருகிறார் நெல்சன். இதனால் தலைவர் 172 படமாக ஜெயிலர் 2 உருவாகவுள்ளதும் உறுதியாகியுள்ளது.

F5K8IWibUAAt3a3 (2)

ஜெயிலர் 2ம் பாகத்திலும் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் கேமியோ ரோலில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் வில்லன் கேரக்டருக்காக இந்த முறை பாலிவுட் சென்றுள்ளார் நெல்சன். அதன்படி ஜெயிலர் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ரன்பீர் கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது இக்கூட்டணி உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது.

இந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ரன்பீர் கபூர், சமீபத்தில் வெளியான அனிமல் மூவியில் ரத்தம் தெறிக்க தெறிக்க நடிப்பில் மிரட்டியிருந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதுமட்டும் இல்லாமல் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல ரீச் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அனிமல் 2, பிரம்மாஸ்த்ரா 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் தற்போது ஜெயிலர் 2ம் பாகம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரன்பீர் கபூர் ஜெயிலர் 2-வில் இணைந்தால் படத்துக்கு பாலிவுட்டிலும் பெரிய சக்சஸ் இருக்கும் என நெல்சன் கணக்குப் போட்டுள்ளார். அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் கிடைக்கும் என சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருகிறதாம். அதனால் இக்கூட்டணி இணையுமா என ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Cinema News

To Top