Connect with us

“வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் மீண்டும் இணையவிருக்கும் பிரபல இயக்குனர்! வெளியான Latest தகவல்!”

Cinema News

“வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் மீண்டும் இணையவிருக்கும் பிரபல இயக்குனர்! வெளியான Latest தகவல்!”

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளதாக வெற்றிமாறன் அறிவித்துள்ளார். சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது ’கங்குவா’ என்ற படம் உருவாகி வருகிறது.

இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் பிரபல இயக்குனர் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’வடசென்னை’ திரைப்படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்றும், அப்போதே ‘வாடிவாசல்’ படத்தில், அவரை நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்து விட்டதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் மீண்டும் அமீர், சூர்யா ஒரே படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் அமீர் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 “Pongal 2026 Mega Clash: Jana Nayagan vs Parasakthi – யாருக்கு Mass Opening?” 🎬⚔️

More in Cinema News

To Top