Connect with us

H வினோத் இயக்கவிருக்கும் KH 233 படம் டிராப்பா?! இதுதான் காரணமா?!

Cinema News

H வினோத் இயக்கவிருக்கும் KH 233 படம் டிராப்பா?! இதுதான் காரணமா?!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் கமல்ஹாசனின் 233 வது திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ட்ராப் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

750x450_746082-kh233

’சதுரங்க வேட்டை’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’நேர்கொண்ட பார்வை’, ’வலிமை’, ’துணிவு’ ஆகிய படங்களை இயக்கியவர் எச் வினோத். இவர் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் 233 வது திரைப்படத்தை அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படம் ட்ராப் என தெரிகிறது. எச் வினோத் கூறியது போலீஸ் கதை என்றும் ஏற்கனவே பல போலீஸ் கதைகளில் கமல்ஹாசன் நடித்து விட்டதை அடுத்து இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று அவர் மறுத்து விட்டதாகவும் இதனை அடுத்து எச் வினோத் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் எச் வினோத் அடுத்ததாக ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணியை அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!!

More in Cinema News

To Top