Connect with us

“Thug Life படத்தின் Shooting எப்போது தொடங்கவுள்ளது?!”

Cinema News

“Thug Life படத்தின் Shooting எப்போது தொடங்கவுள்ளது?!”

சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியது. அதில், கமல்ஹாசன் கை கட்டிக்கொண்டு ஸ்டைலாக நிற்க, அவரை சுற்றி லைட்டிங் டீம் டெக்னீஷியன்கள் இருந்தனா். இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், படத்தை கோடை விடுமுறை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனா். ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

AR ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 18-ம் தேதி சென்னையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை கமல் தொடங்க உள்ளாா்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  களத்தில் அதிரடி காட்டப்போவது யார்..? ஹைதராபாத் மண்ணில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

More in Cinema News

To Top