Connect with us

‘லால்சலாம்’ படத்தின் ஆடியோ லான்ச் எப்போ தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..

Cinema News

‘லால்சலாம்’ படத்தின் ஆடியோ லான்ச் எப்போ தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அன்புமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் படு மிரம்மாண்டமாக உருவாகி உள்ள லால்சலாம் படத்தின் ஆடியோ லான்ச் குறித்த சிறப்பான தரமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவன தரைக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க . மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மகளின் ஆசைக்காக நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைய தற்போது இந்த படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த சிறப்பான தரமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதனபடி டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘லால்சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு பல படங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வெளியாக காத்திருக்கும் நிலையில் ‘லால் சலாம்’ படமும் பொங்கல் ரேஸில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யாவின் “கருப்பு” மே 15 ரிலீஸ்? ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருமா!

More in Cinema News

To Top