Connect with us

ரஷ்யாவில் சர்வதேச விருது வென்ற கொட்டுக்காளி திரைப்படம்..!!

Cinema News

ரஷ்யாவில் சர்வதேச விருது வென்ற கொட்டுக்காளி திரைப்படம்..!!

சினிமா ரசிகர்கள் மத்தியில் அசரவைக்கும் அதிரடியான வரவேற்பை பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச விருது விழாவில் உயரிய விருதை வென்று அசத்தியுள்ளது.

கூழாங்கல் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய வினோத ராஜின் இயக்கத்தில் அடுத்ததாக உருவான திரைப்படமே கொட்டுக்காளி.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க அவருடன் பிரபல கேரள நடிகை அண்ணா பென் உள்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இப்படம் ஏற்கனவர் பல விருதுகளை வென்ற நிலையில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவையும் பெற்று பட்டிதொட்டி எங்கும் நல்ல பெயரெடுத்தது.

இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு உயரிய விருதையும் வென்றுள்ளது. விழாவில் கலந்துகொண்டு விருதை பெற்ற இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் விழா மேடையில் தமிழில் பேசியதாவது :

இந்த விருது முக்கியமான தருணத்தில் எனக்கு கிடைத்துள்ளது. இதை நான் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், துணை தயாரிப்பாளர் கலை, நடிகர்கள் சூரி, அனாபென், புரடக்சன் டிபார்ட்மென்ட், எப்போதும் என்னைவிட்டு போகாத என்னுடைய டீம், திரைப்படத்தின் பலமாக இருந்த அனைவருக்கும், எனது மனைவி மற்றும் குழந்தைக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என இயக்குநர் வினோத்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top