Connect with us

சர்ச்சைகளுக்கு நடுவே கெமியின் அவசர வெளியேற்றம் – பிக்பாஸ் 9ல் அதிர்ச்சி!

bigg boss +9 tamil

Bigboss Season 9

சர்ச்சைகளுக்கு நடுவே கெமியின் அவசர வெளியேற்றம் – பிக்பாஸ் 9ல் அதிர்ச்சி!

Bigg Boss 9: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களின் மையமாகி வரும் நிலையில், போட்டியாளர் கெமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் பொழுதுபோக்கிற்காக பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பார்வையாளர்களின் மனநிலையை பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, இம்முறை போட்டியாளர்கள் தேர்வில் பிக்பாஸ் குழுவினர் தவறு செய்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பார்வதி மற்றும் திவாகர் ஆகியோர் “என்ன செய்தாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம்” என்ற அணுகுமுறையுடன் நடந்து வருகிறார்கள். பார்வதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமைதியாக இருந்தாலும், அதன் பிறகு தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் கன்டென்ட் உருவாக்குவதற்காக இப்படிச் செய்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வீட்டில் தன்னை முன்னிறுத்திக் காட்டவே இவ்வாறு செய்கிறார் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேபோல் திவாகரும் எப்போதும் தன் பெருமையைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹோட்டல் டாஸ்க் நடக்கும் போது சாண்ட்ரா மிகுந்த உழைப்புடன் பணியாற்றியிருந்தாலும், வியானா மற்றும் திவாகர் இருவரும் அந்த பெருமையை தாங்கள் பெற்றுக்கொள்ள முயன்றனர். இதனால் பார்வதி–திவாகர் இருவரையும் வெளியே அனுப்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.

மொத்தத்தில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் குழுவாக விளையாடாமல், தனிப்பட்ட பிரபலத்திற்காக போராடி வருவது பார்வையாளர்களை கடுப்பேற்றி விட்டது.

இந்நிலையில், போட்டியாளர் கெமி உடல்நலக்குறைவால் — குறிப்பாக ஈரப்பதம் காரணமாக தோலில் பிரச்சனை ஏற்பட்டதால் — மருத்துவ சிகிச்சைக்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💫 சிம்பு பாராட்டிய காதல் படம் “ஆரோமாலே” 💞 | New Gen Romantic Film from Tamil Cinema 🎬

More in Bigboss Season 9

To Top