Connect with us

வெறித்தனம் வெறித்தனம் – கவினின் ‘ஸ்டார்’ படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியானது..!!

Cinema News

வெறித்தனம் வெறித்தனம் – கவினின் ‘ஸ்டார்’ படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியானது..!!

கவின் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் ஸ்டார் படத்தின் சிறப்பான தரமான கிலிம்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில்ந் நடித்து பேமஸ் ஆனவர் கவின்.

பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய கவினுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஏறுமுகம் கண்ட கவினுக்கு ஹீரோவாக நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தது. அதில் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து தற்போது கவின் நடித்து வருகிறார் .

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடித்த முதல் திரைப்படம் லிஃப்ட். ஹாரர் த்ரில்லர் படமான இதில் நம்ப கவின் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்த படமோ சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது .

லிஃப்ட் படத்தின் வெற்றிக்கு பின் கவின் நடிப்பில் அடுத்ததாக வெளியான திரைப்படம் டாடா. கணேஷ் கே பாபு என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய இந்த படமும் கவினுக்கு மாபெரும் வெற்றியை தேடி தர தற்போது அடுத்தடுத்த படங்களில் கவின் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இயக்குனர் இளம் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏராளமா இளம் நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த அப்டேட் என்னவென்றால் இளன் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்டார்’ படத்தின் Star In The Making பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அழகிய கிலிம்ஸ் வீடியோ மூலம் படக்குழு தெரிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பல மொழி படங்களில் பட்டயகிளப்பும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top