Connect with us

குகேஷுக்கு கோடிகள், கார்த்திகாவுக்கு இல்லை — காரணம்?

Sports

குகேஷுக்கு கோடிகள், கார்த்திகாவுக்கு இல்லை — காரணம்?

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சென்னை கண்ணகி நகர் வீராங்கனை கார்த்திகா, தனது சாதனையால் தமிழகத்தின் பெருமையாக மிளிருகிறார். ஆனால், இதே நேரத்தில் ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது. செஸ்ஸில் உலக சாம்பியனாகி சாதித்த குகேஷுக்கு தமிழக அரசு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கிய நிலையில், கார்த்திகாவுக்கு வெறும் 25 லட்ச ரூபாயே வழங்கப்பட்டது. இதனை “விளையாட்டில் பாரபட்சம்” என பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குகேஷுக்கு அளிக்கப்பட்ட அளவிலான பாராட்டை, கேரம் உலக சாம்பியனான காசிமாவுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, அரசு அவருக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியிருந்தது. ஆனால் கார்த்திகா போன்ற விளிம்புநிலைப் பின்னணியிலிருந்து வந்த வீராங்கனைக்கு குறைந்த தொகை வழங்கப்பட்டிருப்பது பலரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

“செஸ்ஸில் சாதித்த பையனுக்கு 5 கோடி, கபடியில் தங்கம் வென்ற பெண்ணுக்கு 25 லட்சம்தானா?” என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பேசப்படுகிறது. பலரும், கார்த்திகாவின் வெற்றி வெறும் விளையாட்டு சாதனையாக அல்லாமல், சமூக நிலைமைகளைக் கடந்து உயர்ந்த ஒரு சின்னமாக பார்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டி20 உலகக்கோப்பை: இந்தியா–பாகிஸ்தான் மோதல் தேதி மற்றும் அட்டவணை வெளியானது!

More in Sports

To Top