Connect with us

“இன்று வெளியாகும் KH 234 படத்தின் Title இதுதானா? வெளியான Latest Viral Poster Pic!”

Cinema News

“இன்று வெளியாகும் KH 234 படத்தின் Title இதுதானா? வெளியான Latest Viral Poster Pic!”

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’கமல் 234’. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு கமல் – மணிரத்தினம் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி ஸ்பெஷல் வீடியோ வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தின் டைட்டிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’நாயகன் 2’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. கமல் – மணிரத்னம் இணைந்த ’நாயகன்’ திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’கமல் 234’ படத்திற்கு ’நாயகன் 2’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’நாயகன்’ படம் போல் ‘நாயகன் 2’ படமும் ஒரு சூப்பர் ஹிட் படமாக ரசிகர்களுக்கு கிடைக்குமா? ’நாயகன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தது போல் கமல்ஹாசனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்குமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OG Box Office Day 2: வெள்ளிக்கிழமை வசூலில் பெரும் வீழ்ச்சி… பவன் கல்யாணின் ‘ஓஜி’ 2வது நாள் வருவாய் எவ்வளவு?

More in Cinema News

To Top