Connect with us

“இந்தியன் 2 படத்தின் Shooting நிறைவு! அடுத்து Thug Life படத்தின் Shooting எப்போது?!”

Cinema News

“இந்தியன் 2 படத்தின் Shooting நிறைவு! அடுத்து Thug Life படத்தின் Shooting எப்போது?!”

பிரமாண்ட இயக்குநா் ஷங்கர் இயக்கத்தில் நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய இந்தியன் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஃபாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்தது. படம் ரிலீஸான சில நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்து புதிய சாதனைகளை படைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறாா். இதனால் இந்தியன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகா்வால், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனா். லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாா். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியது. அதில், கமல்ஹாசன் கை கட்டிக்கொண்டு ஸ்டைலாக நிற்க, அவரை சுற்றி லைட்டிங் டீம் டெக்னீஷியன்கள் இருந்தனா்.

இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படத்தை கோடை விடுமுறை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனா். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படமான தக் லைப் என்கிற படத்தில் கமல் நடிக்க உள்ளாா். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. AR ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தநிலையில், தக் லைப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் சென்னையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை கமல் தொடங்க உள்ளாா்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இழிவான முறையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி - செல்வப்பெருந்தகை விமர்சனம்

More in Cinema News

To Top