Connect with us

“பிரபல நடிகரின் அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன்! Viral!”

Cinema News

“பிரபல நடிகரின் அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன்! Viral!”

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் திரை உலகில் பிஸியான நடிகர்களில் ஒருவர் என்பதும் அவர் ’இந்தியன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ’இந்தியன் 3’ ’தக்லைஃப்’, ‘கல்கி 2898 AD’ மற்றும் அன்பறிவ் இயக்கும் திரைப்படங்கள் உள்பட ஒருசில திரைப்படங்களை கையில் வைத்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் அவர் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ’SK 21’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கிட்டத்தட்ட படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது என்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கமல்ஹாசனை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அணுகியதாகவும், கமல்ஹாசன் யோசித்து பதில் சொல்வதாக கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் படம் என்பதால் இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடிக்க ஒப்புக் கொள்வார் என்றே கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் கமலஹாசன், சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ’தலைவர் 171’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால், ஒரே நேரத்தில் கமல், ரஜினி ஆகிய இரண்டு ஜாம்பவான்களுடன் நடிக்கும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயகுமாரின் அடுத்த புரட்சி - வெளியானது எலக்சன் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top