Connect with us

பெரிய தொகைக்கு விலைபோன ஜோதிகாவின் புதிய படம்..!!

Cinema News

பெரிய தொகைக்கு விலைபோன ஜோதிகாவின் புதிய படம்..!!

ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள சைத்தான் படம் மிக பெரிய தொகைக்கு விலைபோய் உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ள அவருக்கு தமிழ் மட்டுமின்றி வெற்றி மொழி படங்களில் இருந்து ஏரளமான பட வாய்ப்புகள் வருகின்றனர்.

அந்தவகையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் சைத்தான் . குஜராத்தி மொழியில் உருவான “வாஷ்” என்ற படத்தின் ரீமேக்காக சைத்தான் உருவாகியுள்ளது.

பில்லி, சூனியம் என்று கூறப்படும் பிளாக் மேஜிக் மற்றும் ஹாரர் ஜானரில் உருவாகிய திரைப்படம் குஜராத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இதனை பாலிவுட்டுக்கு ஏற்றவாறு படமாக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகை ஜோதிகா மற்றும் மாதவன் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சைத்தான் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதுமட்டுமின்றி இப்படத்தை அந்நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு அணியிடம் ஆல் அவுட்டான குஜராத் - RCB அணிக்கு 148 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top