Connect with us

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியானது

Sports

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியானது

துபாயில் நடைபெற்ற அறிவிப்பின் போது, அடுத்த ஆண்டு ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ள 16-வது ஐசிசி ஜூனியர் (U19) ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முழு போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், அனைத்து அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் கட்டத்தில், ஒவ்வொரு அணி தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று அணிகள் சூப்பர்-6 கட்டிற்கு முன்னேறுகின்றன.

பிரிவுகள் பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளன: ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் அயர்லாந்து, ஜப்பான் மற்றும் இலங்கை இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியா, வங்காளதேசம், அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன. ‘சி’ பிரிவில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும், ‘டி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய U19 அணி ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அணி தனது முதல் லீக் ஆட்டத்தை ஜனவரி 15-ஆம் தேதி புலவாயோவில் அமெரிக்காவுக்கு எதிராக ஆரம்பிக்கிறது. ஜனவரி 17-ஆம் தேதி இந்தியா வங்காளதேசத்தையும், ஜனவரி 24-ஆம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது. தொடரின் உச்ச கட்டமான இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயின் ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் கிடைப்பது சாத்தியமில்லை.” – மனு பாக்கர்

More in Sports

To Top