Connect with us

இளையராஜா மனுவுக்கு சாதகமாக தீர்ப்பு.. ‘டியூட்’ படத்துக்கு பெரிய அதிர்ச்சி

pradeep illaiyaraja

Cinema News

இளையராஜா மனுவுக்கு சாதகமாக தீர்ப்பு.. ‘டியூட்’ படத்துக்கு பெரிய அதிர்ச்சி

‘டியூட்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா உருவாக்கிய ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘100 வருஷம்’ போன்ற பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக கூறி அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பு நிறுவனம், பாடல்களின் உரிமை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகவும், தாங்கள் சோனியிடம் இருந்து அனுமதி பெற்றதாகவும் தெரிவித்தது.

இதற்கு எதிராக இளையராஜா தரப்பு, எக்கோ நிறுவனத்துக்கு எதிராக முன்பே ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், அந்த வழியாக அனுமதி பெறுவது சட்டப்படி தகுந்ததல்ல என்று விளக்கினர். இந்நிலையில் நீதிபதி 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள் தற்போது ‘ட்ரெண்ட்’ ஆகி வரும் சூழலில், இளையராஜாவுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன என்பதையும், படம் ஓடிடியில் வெளியாகி விட்டபின் ஏன் வழக்கு தொடரப்பட்டது என்பதையும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு, படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக, ஆனால் அது “போன்றவர் இல்லை” எனத் திரும்பிவந்ததாக தெரிவித்தது. தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணையில் நீதிபதிகள், பாடலின் புனிதத்திற்கே பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் ‘கருத்த மச்சான்’ பாடலை டியூட் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பாடலை அகற்ற 7 நாள் அவகாசம் வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவன கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன், இளையராஜா மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு அடுத்ததாக ஜனவரி 7-ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ஜோவிதா லிவிங்ஸ்டன் Tamil Entry! 🌟 Fans Excited for Her First Film!"

More in Cinema News

To Top