Connect with us

ஜன நாயகன் சென்சார் விவகாரம்: பவன் கல்யாண் கருத்து வைரல்

Cinema News

ஜன நாயகன் சென்சார் விவகாரம்: பவன் கல்யாண் கருத்து வைரல்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ஜன நாயகன்” திரைப்படத்தின் சென்சார் விவகாரம் தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், சென்சார் வாரியம் எடுத்த முடிவுகளுக்கு அரசை குறை கூறுவது சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்துள்ளார். சென்சார் வாரியம் தனித்தனி விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படும் அமைப்பு என்றும், அதன் முடிவுகளை அரசியலுடன் இணைத்து பார்க்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், தனது “OG” திரைப்படத்தை எடுத்துக்காட்டாக கூறிய பவன் கல்யாண், அந்த படத்திற்கும் சென்சார் வாரியம் ‘A’ சான்றிதழ் வழங்கியதை நினைவுபடுத்தினார். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் அதற்கேற்ற வகையில் அந்த சான்றிதழ் வழங்கப்பட்டது என்றும் அவர் விளக்கினார். “விதி என்றால் விதிதான்… அது யாருக்காகவும் மாற்றப்பட முடியாது” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஒரு படத்தின் சென்சார் செயல்முறைக்கும் அரசியல் ஆட்சிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றும், இரண்டும் தனித்தனி அமைப்புகள் எனவும் பவன் கல்யாண் குறிப்பிட்டார். ‘ஜன நாயகன்’ படக்குழு இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 7 மணி நேர சிபிஐ விசாரணையில் ஆஜரான TVK தலைவர் விஜய்

More in Cinema News

To Top