Connect with us

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியில் சேர்வதில் ஜடேஜா கொடுத்த பெரிய ட்விஸ்ட்!

Sports

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியில் சேர்வதில் ஜடேஜா கொடுத்த பெரிய ட்விஸ்ட்!

மும்பை,
வரும் டிசம்பர் 15 அல்லது 16 ஆம் தேதி நடைபெறவுள்ள 19வது ஐபிஎல் வீரர் ஏலத்திற்கான தயாரிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15க்குள் சமர்ப்பிக்க 10 அணிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில், வீரர்கள் பரிமாற்ற பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதில் முக்கியமானதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தங்களுடன் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான மாற்றாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை வழங்க ராஜஸ்தான் நிர்வாகம் கோரியதாக கூறப்படுகிறது. தகவலின்படி, CSK நிர்வாகமும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்ல ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பெரிய ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது — ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேரும் முன் கேப்டன் பதவியை தருமாறு கோரியுள்ளார். சஞ்சு சாம்சன் CSK-க்கு சென்றால், ராஜஸ்தான் அணியின் கேப்டன் இடம் காலியாகும். அதனால், ஜடேஜா அந்தப் பொறுப்பை விரும்புவதாக தெரிகிறது.

இப்போது கேள்வி — ஜடேஜாவின் இந்த கோரிக்கைக்கு ராஜஸ்தான் நிர்வாகம் சம்மதிப்பதா? என்பது தான். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜோட்டாவின் இறுதி ஊர்வலத்தில் ஏன் வரவில்லை? ரொனால்டோ பதில்!

More in Sports

To Top