Connect with us

ராஜஸ்தான் அணியில் ஜடேஜாவின் ஸ்டைலிஷ் என்ட்ரி… வீடியோ

Sports

ராஜஸ்தான் அணியில் ஜடேஜாவின் ஸ்டைலிஷ் என்ட்ரி… வீடியோ

சென்னை,
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக, அணிகள் பரஸ்பர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வீரர் வர்த்தக மாற்றங்களை செய்து வருகின்றன.

அதன்படி, சிஎஸ்கே அணி, ராஜஸ்தானிலிருந்து சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கு பதிலாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை தர வேண்டும் என ராஜஸ்தான் கேட்டது. சமீபத்தில் நடந்த ஒப்பந்தத்தின் மூலம், ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை மாற்றாக வழங்கி, சஞ்சு சாம்சனை சென்னை அணி பெற்றுள்ளது. இந்த மாற்றத்தைக் குறித்து ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, ஜடேஜா அணியில் இணைந்ததை ராஜஸ்தான் அணி ஒரு சிறப்பு வீடியோவின் மூலம் அறிவித்துள்ளது. அந்த வீடியோவில், பிகில் படத்தின் இன்ட்ரோ பாணியில் ஜடேஜா அறிமுகமாகும் காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல் டெஸ்ட்: இந்தியா பந்துவீச்சில் தாக்கம் — தென்ஆப்ரிக்கா சரிவில்

More in Sports

To Top