Connect with us

ஐபிஎல் 2026: மினி ஏலம் பற்றிய புதிய தகவல் வெளியீடு!

Sports

ஐபிஎல் 2026: மினி ஏலம் பற்றிய புதிய தகவல் வெளியீடு!

சென்னை,
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 2026 19வது சீசனுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முன்னதாக, பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணிகளில் இருந்து தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இதே நேரத்தில், டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யும் வாய்ப்பும் இருப்பதால், சில முக்கிய வீரர்கள் புதிய அணிகளுக்கு மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த முறை ஏலம் இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

To Top