Connect with us

வாகனம் மோதி காயம்: ‘கில்லி’ நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

Cinema News

வாகனம் மோதி காயம்: ‘கில்லி’ நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

கில்லி’ படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்த Ashish Vidyarthi, தனது 2ம் மனைவியுடன் அசாம் மாநிலம் குவஹாத்தியில் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அருகே சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து, ஆஷிஷ் வித்யார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தாங்களும் மனைவியும் தற்போது observation-ல் இருப்பதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவரின் விரைவான குணமடைதலை வேண்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மம்மூட்டியின் ‘காலம்காவல்’ – OTT வெளியீட்டுக்கு தயாரான பரபரப்பு திரில்லர்

More in Cinema News

To Top