Connect with us

“வேட்டி சட்டையில் இந்தியன் தாத்தா..! இந்தியன் 2 Still வெளியிட்டு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து!”

Cinema News

“வேட்டி சட்டையில் இந்தியன் தாத்தா..! இந்தியன் 2 Still வெளியிட்டு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து!”

உலகநாயகன் என உலகில் உள்ள தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பிக் பாஸ் சீசன் 1ல் அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பிக் பாச் சீசன் 7 நிகழ்ச்சியே நடைபெற்று வருகிறது.

சுமார் 6 ஆண்டுகள் கால இடைவெளியில் உருவாகி உள்ள இந்த படம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக இன்ட்ரோ வீடியோவை அனைத்து நடிகர்களையும் உள்ளடக்கிய வீடியோவாக அனிருத் இசையுடன் கொடுத்து இருந்தனர். ஆனால், இந்தியன் படத்தில் AR ரஹ்மான் செய்த மேஜிக் மிஸ்ஸிங் என்றும் விஷுவலாக படத்தின் கான்செப்ட்டும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என விமர்சனங்கள் குவிந்துள்ளன.

அடுத்ததாக நேற்று வெளியான தக் லைஃப் படத்தின் இன்ட்ரோ வீடியோ ரசிகர்களை மிரட்டி வந்த நிலையில், அதுவும் ஸ்டார் வார்ஸ் சீரிஸ் படத்தின் காப்பியா? என்கிற கேள்வியை கிளப்பி உள்ளனர். ஆனால், இது முழுக்க முழுக்க வேறு விதமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வேட்டி சட்டையில் இந்தியன் தாத்தா சேனாபதி இருக்கும் புதிய வொர்க்கிங் ஸ்டில்லை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டு

என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top