Connect with us

உலகக்கோப்பை வெற்றி: இந்திய மகளிர் அணிக்கு டாடா நிறுவனத்தின் அதிரடி பரிசு!

Sports

உலகக்கோப்பை வெற்றி: இந்திய மகளிர் அணிக்கு டாடா நிறுவனத்தின் அதிரடி பரிசு!

மும்பை,
13வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 52 ஆண்டுகாலக் காத்திருப்பை முடித்த இந்த வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.

கோப்பையை கைப்பற்றிய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி மற்றும் பிசிசிஐ சார்பில் ரூ.51 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது — இது மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசாகும்.

இதற்கிடையில், அணியில் விளையாடிய வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களும் தனித்தனியாக பரிசுகள் வழங்கி பாராட்டி வருகின்றன. அதில், பிரபல வாகன நிறுவனம் டாடா மோட்டார்ஸ், இந்திய மகளிர் அணிக்கு வரவிருக்கும் டாடா சியரா SUV காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய மாடல் நவம்பர் 25 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளிர் உலகக்கோப்பை சாதனை: பஞ்சாப் வீராங்கனைகளுக்கு தலா ரூ.11 லட்சம் பரிசு அறிவிப்பு!

More in Sports

To Top