Connect with us

உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியா இரு வெள்ளி பதக்கங்கள் கைப்பற்றி அசத்தல்

Sports

உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியா இரு வெள்ளி பதக்கங்கள் கைப்பற்றி அசத்தல்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளங்கி வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பிரிவில், இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 466.9 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றார். மிகச் சிறிய வித்தியாசத்தில், சீன வீரர் யுகுன் லூ 467.1 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பிரான்ஸ் வீரர் ரோமைன் 454.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் 432.6 புள்ளிகளுடன் 5வது இடத்தில் முடித்தார். குறிப்பாக, தகுதி சுற்றில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 597 புள்ளிகளை பெற்று உலகச் சாதனையை சமன் செய்தது பெரும் கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி போட்டியிலும் இந்தியாவின் இஷா சிங் மற்றும் சம்ரத் ராணா ஜோடி சிறப்பாகப் பங்கேற்றது. கடுமையான போட்டியில், சீனாவின் கியான்சூன் யாவ் மற்றும் காய் ஹூ ஜோடிக்கு 10-16 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டதால், இந்திய ஜோடி வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தது.

தற்போது வரை இந்தியா மொத்தம் 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா 9 தங்கம் உள்பட 15 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரிஷப் பண்ட் ரிட்டயர்டு ஹர்ட் – இந்திய ‘ஏ’ அணிக்கு பெரிய பின்னடைவு!

More in Sports

To Top