Connect with us

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டி20 மழையால் ரத்து — தொடரை கைப்பற்றிய இந்தியா!

Sports

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டி20 மழையால் ரத்து — தொடரை கைப்பற்றிய இந்தியா!

பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இதனையடுத்து இன்று பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் கடைசி டி20 நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங்கிற்கு வந்த அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியாக ஆடியனர். 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அபிஷேக் சர்மா 23 ரன்களுடனும், கில் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ரசிகர்கள் ஆட்டம் மீண்டும் தொடங்கும் என நம்பியிருந்தாலும், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்துசெய்யப்பட்டது.

இதனால், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி மூலம் தொடரை சமன்செய்யலாம் என நினைத்த ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை மழையால் முறியடைந்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

To Top