Connect with us

2வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகியதால்… மாற்று வீரர் தேர்வில் அவசர ஆலோசனை

Sports

2வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகியதால்… மாற்று வீரர் தேர்வில் அவசர ஆலோசனை

மும்பை,
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் 2 டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாம் நாளிலேயே தோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை துரத்த முடியாமல் 93 ரன்னில் கூட்டாக சரிந்து இந்தியா 0-1 என்ற நிலையில் தொடரில் பின்தங்கியுள்ளது.

இதையடுத்து கவுகாத்தியில் நடைபெறும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆனால், இந்தப் போட்டிக்கு முன் இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்டின் போது கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய கேப்டன் சுப்மன் கில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கில் 2வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இதற்காக ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில் கில்லுக்கு மாற்றாக யார் களமிறக்கப்படுவர் என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது. அணியில் உள்ள சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் இடது கை பேட்ஸ்மேன்கள். இந்திய அணியில் ஏற்கனவே 5 இடது கை துடுப்பாளர்கள் இருப்பதால் இவர்களில் ஒருவரை தேர்வு செய்வது குறித்து பயிற்சியாளர் கம்பீர் குழப்பத்தில் உள்ளார்.

அதே நேரத்தில், அணிக்கு வெளியே உள்ள மற்ற வீரரை சேர்க்கலாமா என்பதையும் அவர் ஆலோசித்து வருகிறார். 2வது டெஸ்டுக்கு முன் இந்திய அணியின் இறுதி முடிவு மீது கவனம் திரும்பியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளிர் உலகக்கோப்பை சாம்பியன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

More in Sports

To Top