Connect with us

இந்திய வீரர்களை குறைத்துப் பேசிய தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்… கண்டனம் தொடர்கிறது

Sports

இந்திய வீரர்களை குறைத்துப் பேசிய தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்… கண்டனம் தொடர்கிறது

சென்னை:
கவுகாத்தியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடும் சிக்கலில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி, 5வது நாள் தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் மற்றும் ஜடேஜா தற்போது விளையாடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் 1–0 முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்திய மண்ணில் 25 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு பெற்றுள்ளது. இதனால் இந்திய அணியைப் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதில், நேற்று செய்தியாளர்களுடன் பேட்டி அளித்த தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய வீரர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் டிக்ளேர் செய்யாமல் நீண்ட நேரம் பேட்டிங் செய்ததைப் பற்றி பதிலளித்த அவர்,
“We Wanted India To Grovel’’
என்று தெரிவித்துள்ளார். “Grovel” என்றால் கைகள் மற்றும் முழங்கால்களை தரையில் ஊற்றி மண்டியிடுவது என அர்த்தம், இது இனவெறியை குறிக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால் பல தரப்பினர் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 1976-ல் இங்கிலாந்து கேப்டன் டோனி கிரீக், வெஸ்ட் இண்டீஸ் அணியை இதே வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்தார்; பின்னர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி இன்று தொடங்குகிறது

More in Sports

To Top