Connect with us

2வது டெஸ்ட்: இந்தியா முன் பிரம்மாண்ட இலக்கை வைத்த தென் ஆப்பிரிக்கா

Sports

2வது டெஸ்ட்: இந்தியா முன் பிரம்மாண்ட இலக்கை வைத்த தென் ஆப்பிரிக்கா

இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, செனுரன் முத்துசாமியின் (109) சதத்தின் உதவியால் 489 ரன்கள் குவித்தது.

அதற்கு பதிலளித்த இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. பாலோ-ஆனை தவிர்க்க 290 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை அடைய முடியாமல் இந்தியா பின்னடைவைச் சந்தித்தது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 58 ரன்களுடன் சிறந்த பங்களிப்பு செய்தார். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பேட்டிங்கை சிரமப்படுத்தினார்.

பின்னர் 288 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, 3வது நாள் ஆட்ட முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 26 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா மொத்தம் 314 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் நின்றது.

4வது நாள் ஆட்டம் தொடங்கியபின் தென் ஆப்பிரிக்கா தொடர் விக்கெட்டுகளை இழந்தாலும் நடுவில் ஸ்டப்ஸ் – டோனி டி சோர்சி ஜோடி நிலை தக்க வைத்தது. இருவரும் இணைந்து 101 ரன்கள் சேர்த்து அணியின் முன்னிலை அதிகரித்தனர். அரைசதத்தை 1 ரன்னில் தவறவிட்ட டி சோர்சி (49) வெளியேற, ஸ்டப்ஸ் தன்னம்பிக்கையுடன் அரைசதம் அடித்தார்.

பின்னர் ஸ்டப்ஸ் – முல்டர் கூட்டணி எடுக்கும் ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்காவின் முன்னிலை 500 ரன்களை தாண்டியது. சதம் அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டப்ஸ் 94 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி டிக்ளேர் செய்ய முடிவு செய்தது.

2வது இன்னிங்ஸில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு மெகா இலக்கான 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முல்டர் 35 ரன்களுடன் அவுட் ஆகாமல் நின்றார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையடுத்து, இந்திய அணி 549 ரன்கள் என்ற அதிரடியான இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பவுமாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – கவாஸ்கர் நேரடி அறிவுரை

More in Sports

To Top