Connect with us

“கேப்டன் பொறுப்பு பெருமை அளிக்கிறது’ – ரிஷப் பண்ட்.”

Sports

“கேப்டன் பொறுப்பு பெருமை அளிக்கிறது’ – ரிஷப் பண்ட்.”

கவுகாத்தி:
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், தொடரின் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியின் பார்சபரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

முதலாவது டெஸ்டின் 2-வது நாளில் கழுத்து பிடிப்பால் இந்திய கேப்டன் சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் மீண்டும் அணியில் சேர்ந்திருந்தாலும், காயம் முழுமையாக ஆறாததால் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காயத்தின் தீவிரத்தை அறிய அவர் மும்பைக்கு செல்ல உள்ளார்.

இதனால் துணை கேப்டன் ரிஷப் பண்ட், இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக பொறுப்பேற்கிறார்.

இதுகுறித்து பண்ட் தெரிவித்துள்ளார்:
ஒரே ஒரு போட்டிக்காக கேப்டனாக இருப்பது மிகச் சிறந்த சூழல் அல்ல. என்பதினாலும், இந்த வாய்ப்பை அளித்த கிரிக்கெட் வாரியத்திற்கு நான் பெருமை கொள்கிறேன். தேசிய அணியை வழிநடத்துவது எப்போதும் ஒரு முக்கியமான தருணம். ஆனால் கேப்டன்ஷிப் குறித்து அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. முதலாவது டெஸ்ட் எங்களுக்கு கடினமாக இருந்தது. இப்போது இந்த டெஸ்டை வெல்ல என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் என்பது முக்கியம்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பவுமாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – கவாஸ்கர் நேரடி அறிவுரை

More in Sports

To Top