Connect with us

டெஸ்ட் தெரியாது… பேங்க் பேலன்ஸ் மட்டும்!” – இந்திய வீரர்களை தாக்கும் பீட்டர்சன்

Sports

டெஸ்ட் தெரியாது… பேங்க் பேலன்ஸ் மட்டும்!” – இந்திய வீரர்களை தாக்கும் பீட்டர்சன்

இந்தியாவின் சமீபத்திய டெஸ்ட் தோல்வி காரணமாக, பேட்ஸ்மேன்களின் டெக்னிக் குறைபாடு மீண்டும் விவாதமாகியுள்ளது. முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் அடிப்படை திறன்களை விட T20 ஸ்டைல் சிக்ஸ், சுவிட்ச் ஹிட் போன்ற ஷாட்களை மட்டுமே கற்றுக்கொள்வதாக கடுமையாக விமர்சித்தார்.

“ஸ்கோர், பிச்சு, முடிவு எல்லாம் பார்த்தேன்… இந்த தோல்விக்கு காரணம் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக் தான்” என்று அவர் X பக்கத்தில் பதிவு செய்தார். இன்றைய கிரிக்கெட் முழுவதும் பிரகாசமான விளக்குகள், பெரிய பணம், நிறுவன லாபம் ஆகியவற்றைச் சுற்றி மட்டுமே இருப்பதாகவும், சுழற்பந்தை எதிர்கொள்ளும் திறன், நீண்ட இன்னிங்ஸ் கட்டமைக்கும் திறன் ஆகியவை மறைந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வீரர்கள் இதற்கு காரணம் இல்லை; பயிற்சி முறைகளும், கிரிக்கெட் அமைப்பும் இதை உருவாக்கிவிட்டதாகவும் கூறினார். தொடர்ச்சியாக சிக்ஸ் அடிப்பதை மட்டுமே முக்கியப்படுத்தும் காலத்தில், டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருகிறது எனவும் எச்சரித்தார்.

இந்திய அணியின் சமீபத்திய செயல்பாடுகளும் அவரது கருத்துக்கு வலு சேர்க்கின்றன — சொந்த மண்ணில் கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் 4 தோல்வி, நியூசிலாந்து ஒயிட்வாஷ் உள்ளிட்டவை. சுழற்பந்துக்குச் சாதகமான பந்துவீச்சு வியூகமே இந்தியாவை எதிராகப் போகத் தொடங்கியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா அதே பிச்சில் நிதானமாக 55 ரன்கள் எடுத்தது, இந்திய பேட்ஸ்மேன்களின் திறன் குறைபாட்டை மேலும் வெளிப்படுத்தியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரெட்கார்டில் முதல் முறையாக வெளியேற்றப்பட்ட ரொனால்டோரெட்கார்டில்

More in Sports

To Top