Connect with us

இந்திய வீரர்கள் மீது அஷ்வின் கடும் அதிருப்தி

Sports

இந்திய வீரர்கள் மீது அஷ்வின் கடும் அதிருப்தி

சென்னை,
தென் ஆப்பிரிக்கா–இந்தியா டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்பிரிக்கா தொடரில் 1–0 என முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 489 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முத்துசாமி 109 ரன்கள் அடித்து பிரகாசித்தார். இந்தியாவுக்கு குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

பதிலுக்கு இந்திய அணி 201 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. ஜெய்ஸ்வால் 58, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்தனர். மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் எடுத்து இந்திய பேட்டிங்கை தகர்த்தார்.

பாலோ–ஆன் வழங்காமல், தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாளில் ஒளி குறைவால் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

இன்று 4-வது நாளில், தென் ஆப்பிரிக்கா தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. ரிக்கல்டன் 35, மார்க்ரம் 29, பவுமா 3 ரன்களில் வெளியேறினர். இந்திய அணியில் ஜடேஜா 2 விக்கெட்டும், சுந்தர் 1 விக்கெட்டும் பெற்றனர்.

இந்த நிலையில், இந்திய வீரர்களின் அணுகுமுறை குறித்து அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், “2வது இன்னிங்சில் இந்தியா மீண்டு வரும் என நம்புகிறேன். ஆனால் களத்தில் வீரர்களின் உடல் மொழி சரியாக இல்லை”
என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோல்வி காரணம் குறித்து கம்பீருக்கு கவாஸ்கர் முழு ஆதரவு

More in Sports

To Top