Connect with us

ஆசிய ரைசிங் ஸ்டார்ஸ் போட்டிக்கான இந்திய அணியின் பட்டியல் வெளியீடு!

Sports

ஆசிய ரைசிங் ஸ்டார்ஸ் போட்டிக்கான இந்திய அணியின் பட்டியல் வெளியீடு!

புதுடெல்லி:
ஏசிசி ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடர் கத்தாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி நவம்பர் 14ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதில், குரூப் ‘ஏ’ பிரிவில் ஆப்கானிஸ்தான் ஏ, வங்காளதேசம் ஏ, இலங்கை ஏ, ஹாங் காங் அணிகள் உள்ளன. குரூப் ‘பி’ பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, ஓமன், யுஏஇ அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா ஏ அணி தனது முதல் லீக் ஆட்டத்தை நவம்பர் 14ம் தேதி யுஏஇ அணியுடன் விளையாடும். தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியையும், 18ம் தேதி ஓமன் அணியையும் எதிர்கொள்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெறும் நோக்கில் களமிறங்குகின்றன.

இந்த தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜித்தேஷ் சர்மா கேப்டனாகவும், நமன் திர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, சூர்யான்ஷ் ஷெட்ஷே, ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாகூர், குர்ஜப்நீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் ஷரக், அபிஷேக் பொரெல், சுயாஷ் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரிசர்வ் வீரர்களாக குர்நூர் சிங் ப்ரார், குமார் குஷாரா, தனுஷ் கோடியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத் தேர்வாகியுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

To Top