Connect with us

இளையராஜா – அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு – காரணம் என்ன தெரியுமா..?

Cinema News

இளையராஜா – அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு – காரணம் என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜாவை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது :

தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக @tnschoolsedu-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது.

அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார்” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DNA பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு – மகன் புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!

More in Cinema News

To Top