Connect with us

அக்டோபர் மாத சிறந்த வீரர் விருது – பரிந்துரைகள் பட்டியல் வெளியிட்டது ஐசிசி

Sports

அக்டோபர் மாத சிறந்த வீரர் விருது – பரிந்துரைகள் பட்டியல் வெளியிட்டது ஐசிசி

துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அக்டோபர் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் மாத சிறந்த ஆண் வீரர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தானின் நோமன் அலி மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், சிறந்த பெண் வீராங்கனை பட்டியலில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

To Top