Connect with us

“நான் தமிழன்” — துபாய் விழாவில் தனுஷின் பேச்சு வைரல்

Cinema News

“நான் தமிழன்” — துபாய் விழாவில் தனுஷின் பேச்சு வைரல்

நடிகர் தனுஷ் — தமிழ் மொழிக்கும், தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்துவரும் ஒரு கலைஞன். தொடக்கத்தில் “ இவர் எல்லாம் ஒரு நடிகரா?” என்ற கேள்விகளையும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்ட அவர், இன்று பல தேசிய விருதுகள் வென்ற ஒரு முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

சமீபத்தில் அவர் இயக்கியும் நடித்தும் வெளியான ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து, தனுஷ் நடித்துள்ள ஹிந்தி படம் ‘Tere Ishk Mein’ விரைவில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், அண்மையில் அவர் துபாய் வாட்ச் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு பேசியபோது,“நான் தமிழன், தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்; தமிழ் உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். அவரின் இந்த உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Hollywood Freeze ஆன நொடி! 🔥 Tom Cruise gets Honorary Oscar!”

More in Cinema News

To Top