Connect with us

‘96’ குட்டி ஜானு இப்போது எப்படி? கௌரி கிஷனின் லேட்டஸ்ட் லுக்

Cinema News

‘96’ குட்டி ஜானு இப்போது எப்படி? கௌரி கிஷனின் லேட்டஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கிய இடத்தை பிடித்து வருபவர் கௌரி கிஷன். பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகளான இவர், மலையாளத்தில் வெளியான ‘மார்க்கம்களி’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படத்தில் குழந்தை ஜானுவாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, பெரும் வரவேற்பை பெற்றார்.

இதற்குப் பிறகு ‘சுழல் 2’ என்ற வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்த கௌரி கிஷன், ஆக்சன் காட்சிகளில் காட்டிய தைரியமும் நடிப்பு திறமையும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பில் மட்டுமல்லாமல், தனது இயல்பான அழகு, எளிமையான தோற்றம் மற்றும் ஹோம்லி ஸ்டைல் ஆகியவற்றாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர் ஹோம்லி லுக்கில் வெளியிட்டுள்ள புதிய ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Padayappa மீண்டும் திரையரங்கில் – Fans Mass Celebration 💥

More in Cinema News

To Top