Connect with us

பட்ஜெட் கூட்டத்தொடர் : திமுக அரசின் உரையை சட்டசபையில் வாசிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

RN_Ravi_Appavu

Politics

பட்ஜெட் கூட்டத்தொடர் : திமுக அரசின் உரையை சட்டசபையில் வாசிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் திமுக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை படிக்க மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் பட்ஜெட் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2024-25 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வாடிக்கையாக உள்ளது. எனினும், அந்த உரையை தமிழக அரசே உருவாக்கிக் கொடுக்கும். அரசு தங்களது நடப்பு நிதியாண்டுக்கான சாதனைகளை விளக்கும் உரையாக இது இருப்பது வாடிக்கை.

அந்த வகையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஆளுநர் தனது உரையை வணக்கம் என்று சொல்லி தொடங்கினார். மேலும், தொடக்கத்திலும் கடைசியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்பட்டதாகக் கூறியதோடு, அரசு வழங்கிய உரையில் உள்ள பல அம்சங்களை தன்னால் ஏற்க முடியவில்லை எனக் கூறினார்.

இதையடுத்து வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் எனக் கூறி உரையை 2 நிமிடங்களில் முடித்துக் கொண்டு அமர்ந்தார். அதன் பிறகு, ஆளுநர் வாசிக்க மறுத்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். உரையை படிக்காவிட்டாலும், சபாநாயகர் உரையை வாசித்தபோது ஆளுநர் அவையிலேயே இருந்தார்.

இதையடுத்து அவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளது. ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நான்கு நாட்களுக்கு நடைபெறலாம் எனத் தெரிகிறது.

மேலும், பிப்ரவரி 19 அன்று வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தமிழ்நாட்டில் தடை – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!!

More in Politics

To Top