Connect with us

நடிகை கவுதமியிடம் நிலமோசடி.. பாஜக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டாஸ்

Gautami_Land_Fraud_Case

Cinema News

நடிகை கவுதமியிடம் நிலமோசடி.. பாஜக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டாஸ்

நடிகை கவுதமியிடம் நிலமோசடியில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் அதிமுகவில் இணைந்த கவுதமி சில காலம் முன்பு வரை பாஜகவில் இருந்தார். அப்போது, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள தனக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்க அழகப்பன் உதவியை நாடியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் தனது குடும்பத்துடன் சேர்ந்து கவுதமியை ஏமாற்றி அவரது நிலத்தை மோசடி செய்து விற்றதாக கடந்த ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கேரளாவில் வைத்து அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் ஆறு பேரை கைது செய்தது.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நில மோசடியில் ஈடுபட்ட அழகப்பன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தற்போது காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Richard Rishi உடன் ரக்ஷனா ஹீரோயின்! Draupadi 2 First Look Trending!”

More in Cinema News

To Top