Connect with us

🔥📰 ரசிகர்களுக்கு நல்ல செய்தி – ‘துருவ நட்சத்திரம்’ விரைவில் திரைக்கு

Cinema News

🔥📰 ரசிகர்களுக்கு நல்ல செய்தி – ‘துருவ நட்சத்திரம்’ விரைவில் திரைக்கு

பல ஆண்டுகளாக தீராத நிதி மற்றும் சட்டச் சிக்கல்களால் தொடர்ந்து தாமதமாகி வந்த துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது மிக முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். நீண்ட காலமாக படத்தைச் சுற்றி இருந்த அனைத்து பிரச்சனைகளும் முழுமையாக தீர்ந்துவிட்டதாக அவர் உறுதியாக தெரிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம், பல தடைகளையும் சவால்களையும் கடந்து தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. விக்ரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த ஸ்பை-திரில்லர் படம், கவுதம் மேனனின் வித்தியாசமான மேக்கிங் ஸ்டைல் மற்றும் கதை சொல்லலால் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தது. இந்நிலையில், “பிரச்சனை தீர்ந்தது” என்ற இந்த அப்டேட், துருவ நட்சத்திரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. 🎬🔥

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ஜனநாயகன்’ முதல் காட்சி டிக்கெட் விலை – ரசிகர்களை அதிரவைத்த தகவல் 🎟️🔥

More in Cinema News

To Top