Connect with us

பவுமாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – கவாஸ்கர் நேரடி அறிவுரை

Sports

பவுமாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – கவாஸ்கர் நேரடி அறிவுரை

கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட அடையாமல் 93 ரன்னில் சுருண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. சுழலுக்கு ஏற்ற பிட்ச் இருந்தும் பேட்ஸ்மேன்கள் திணறினர்; ஆனால் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மட்டும் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார்.

இந்த சூழ்நிலையில் சுனில் கவாஸ்கர், “பவுமாவின் பொறுமை மற்றும் மனஉறுதியிலிருந்து இந்திய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இது தான் உண்மையான டெஸ்ட் கிரிக்கெட்” எனக் கூறினார். பிட்ச் பிரச்சனை இல்லை; மோசமான நுட்பமும் மனோபலமின்மையே தோல்விக்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.

மேலும், உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடாததால் இப்படிப்பட்ட சுழலான ஆடுகளில் அனுபவம் இல்லாமல் போகிறது என்றும் கவாஸ்கர் சுட்டிக்காட்டினார். பிட்ச் பராமரிப்பாளர்களை தலையீடு செய்யாமல் சுதந்திரமாக விட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அவுட் ஆன கோபத்தில் ஆவேசம் காட்டிய பாகிஸ்தான் வீரர்.ICC தண்டனை விதிப்பு!

More in Sports

To Top