Connect with us

5 கோடியை எட்டுமா காந்தி கண்ணாடி? – 13வது நாள் வசூல் விவரம்

Cinema News

5 கோடியை எட்டுமா காந்தி கண்ணாடி? – 13வது நாள் வசூல் விவரம்

செப்டம்பர் 5ம் தேதி வெளியான கேபிஒய் பாலா நடிப்பில் காந்தி கண்ணாடி திரைப்படம், தனது தயாரிப்பு செலவை விட அதிக வசூலைக் கடந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த படம் பாலாவுக்கு “மிகப்பெரிய வெற்றி” கொடுத்ததாகச் சொல்ல முடியவில்லை. குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்து அதிகம் வசூல் ஈட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் சாதனையை எட்ட முடியாததே, பாலாவுக்கும் அவரது குழுவுக்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நகைச்சுவை கலைஞராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பாலா, பின்னர் தொகுப்பாளராகவும் பிரபலமானார். திரையில் சம்பாதித்த வருமானத்தில் ஒரு பகுதியை மக்களுக்கு உதவியாக வழங்கி வருவதால், பல விமர்சனங்கள் வந்தாலும் பொதுமக்களின் அன்பை இன்றும் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இப்போது, காந்தி கண்ணாடி மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, சின்னத்திரை வெற்றியை வெள்ளித்திரையிலும் தொடர முயற்சி செய்து வருகிறார். பல வாரிசு நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்த நிலையில், பாலாவின் படம் லாபகரமாக உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வசூல் நிலை:
ஷெரிஃப் இயக்கத்தில் கேபிஒய் பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ள காந்தி கண்ணாடி, 13 நாட்களில் மொத்தம் ரூ.4.47 கோடி வசூல் செய்துள்ளது என சாக்னிக் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. தினசரி சராசரியாக ரூ.9 லட்சம் வசூல் வருவதால், வரும் வார இறுதியில் படம் ரூ.5 கோடி வரை எட்டும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

சுமார் ரூ.3.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், தயாரிப்பு செலவை மீறி வசூல் செய்துவிட்டது. மேலும், சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ உரிமங்கள் மூலமும் படத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சில இடங்களில் படத்திற்கு போதுமான திரையிடும் வாய்ப்பு தரப்படவில்லை என்றும், பாலாவை குறிவைத்து சிலர் செயல்பட்டதாக இயக்குநர் ஷெரிஃப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கோடி கிளப்பில் ‘மதராஸி’ – சிவகார்த்திகேயனின் 4வது செஞ்சுரி!

More in Cinema News

To Top