Connect with us

கம்பீர் 2027 வரை பயிற்சியாளராக தொடர்வார் என தகவல்.

Sports

கம்பீர் 2027 வரை பயிற்சியாளராக தொடர்வார் என தகவல்.

மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வைத்திருந்த பெரும் சாதனை கடந்த ஆண்டு ஒக்டோபர்–நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான 0–3 தோல்வியால் முறிந்தது. இந்த தொடர் தோல்வியின் அதிர்ச்சி அடங்குவதற்குள், அடுத்த ஓராண்டிற்குள் தென் ஆப்பிரிக்காவுக்கும் 0–2 என்ற கணக்கில் இந்திய அணி சரணடைந்துள்ளது.

இந்த தொடர்ச்சியான தோல்விகள் காரணமாக, தலைமைப் பயிற்சியாளர் கம்பீரின் பதவி குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல ரசிகர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். கம்பீரின் வழிகாட்டுதலில் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் பங்கேற்று, 7 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் தோல்வியும், 2 டிராவும் கண்டுள்ளது. அணியின் இந்த செயல்திறன் குறைவு, அவரின் பயிற்சி திறனைப் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆனால், இந்த சூழ்நிலையில் எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க பிசிசிஐ முன்வரவில்லை எனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பீர் கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றதுடன், அவரது ஒப்பந்தம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. இதனால், அவரை உடனடியாக நீக்காமல், தொடர்ந்து பொறுப்பில் வைத்திருக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அணியின் சமீபத்திய தோல்விகள் பற்றியும், அதற்கான காரணங்கள் குறித்தும் பிசிசிஐ விரைவில் கம்பீரிடம் விளக்கம் கேட்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியின் செயல்திறனைக் கவனத்தில் கொண்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்திய வீரர்களை குறைத்துப் பேசிய தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்… கண்டனம் தொடர்கிறது

More in Sports

To Top