Connect with us

“மாயாவுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த வாக்கு! என்ன தெரியுமா?!”

Cinema News

“மாயாவுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த வாக்கு! என்ன தெரியுமா?!”

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மாயாவை 80 நாட்களுக்கு மேலாகியும் சக போட்டியாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி, சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சில நேரம் மிகவும் அன்பும், பாசமும், நட்பும் ஆக இருக்கும் மாயா, திடீரென எதிரியாகவும் துரோகியாகவும் மாறுகிறார். பல சமயங்களில் காமெடியாக பேசும் மாயா, திடீரென சக போட்டியாளர்களை துன்புறுத்தும் வகையில் பேசுகிறார். மொத்தத்தில் அவர் ஒரு புரியாத புதிர் என்று தான் கூறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் மாயா கூறிய போது ’தனக்கு திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்றும், சந்திரபாபு, நாகேஷ், நீங்கள், சார்லி சாப்ளின் போன்ற கலைஞர்கள் தான் தனக்கு மானசீக குரு என்றும் ஒரு ஏகலைவன் போல் நான் இவர்களிடம் காமெடியை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் அதற்காக நான் இந்த மேடையை பயன்படுத்திக் கொண்டேன் என்றும் கூறினார்.

மேலும் ’நான் லோகேஷ் கனகராஜ் இடம் ஒரு கதை எழுதி தந்திருக்கின்றேன், நீ பிக்பாஸ் வீட்டில் 100 நாள் இருந்துட்டு வா, நீ வரும்போது உனக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கும் என்று லோகேஷ் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார். அப்போது கமல்ஹாசன் ’கண்டிப்பாக லோகேஷ் நல்லது செய்வார், அவர் தனது உதவியாளர்களையே இயக்குனர் ஆக்கி வருகிறார்.

உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மாயா ’நான் இன்னொரு கதை எழுதி, அந்த கதையில் இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை எல்லாம் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது’ என்று கூறினார். அதற்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இரண்டு படம் நடிச்சாலும், ‘பைசன்’ தான் என் முதல் படம்" – துருவ்

More in Cinema News

To Top