Connect with us

💥 2025-ல் முதல் 1000 கோடி வசூல் – ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ சாதனை

Cinema News

💥 2025-ல் முதல் 1000 கோடி வசூல் – ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ சாதனை

2025-ம் ஆண்டு இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்பது எட்டாக்கனியாகவே கருதப்பட்ட நிலையில், அந்த சாதனையை டிசம்பர் மாதம் வெளியான ஒரு திரைப்படம் முறியடித்துள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் ‘துரந்தர்’ திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 1,000 கோடி ரூபாய் வசூலித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

வெளியான முதல் நாளிலிருந்தே விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இதன் மூலம் 2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த முதல் இந்திய திரைப்படமாக ‘துரந்தர்’ இடம்பிடித்துள்ளது. இந்த அபார வெற்றியின் காரணமாக, ரன்வீர் சிங் இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💍 கல்யாணமும் கேரியரும் – சமந்தாவுக்கு மறக்க முடியாத 2025

More in Cinema News

To Top