Connect with us

ஃபெங்கல் புயலால் ஒத்தி வைக்கிறோம் – ‘மிஸ் யூ’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..!!

Cinema News

ஃபெங்கல் புயலால் ஒத்தி வைக்கிறோம் – ‘மிஸ் யூ’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..!!

சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஸ் யூ’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மிஸ் யூ படகுழு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாகவும், மக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டும், ‘மிஸ் யூ’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.

புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் புரிதலும் ஆதரவும் எப்போதும் போல் நிலைத்திருக்க வேண்டுகிறோம்.

இந்த சூழலில் எங்களுடன் துணை நிற்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, ஐங்கரன் இன்டர்நேஷனல், ஏசியன் சுரேஷ் எண்டெர்டைன்மெண்ட், ஸ்ரீ கற்பக விநாயக பிலிம் சர்க்யூட் ஹவுஸ் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் தொடர் ஆதரவை அளித்து வரும் மீடியா நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என மிஸ் யூ படகுழு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top