Connect with us

பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ்வர ராவ் காலமானார்..!!!

Cinema News

பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ்வர ராவ் காலமானார்..!!!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த விக்னேஷ்வர ராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் துணை நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து பிரபலமான நடிகர் விஸ்வேஷ்வர ராவ்.

விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்த விக்னேஷ்வர ராவ் மக்களின் பாராட்டை பெற்று தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

64 வயதாகவும் விஸ்வேஷ்வர ராவ் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களாக மக்களை மகிழ்வித்து வந்த இந்த நகைச்சுவை கலைஞனின் உயிரிழப்பு . ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஸ்வேஷ்வர ராவ்வின் மரணத்துக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Cinema News

To Top