Connect with us

மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்னா தாஸ்..!!!

Uncategorized

மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்னா தாஸ்..!!!

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தீபக் பரம்போலுக்கும் நடிகை அபர்னா தாஸுக்கும் இன்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா தாஸ். டிக் டாக் வீடியோ மூலம் டிஜிட்டல் உலகில் செம பேமஸ் ஆன அபர்ணா தாஸுக்கு திரைப்படங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அபர்ணா தாஸ் அவர்களுக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான் .

இதனை தொடர்ந்து கவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டாடா திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா நடித்திருந்தார் . இந்த படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக கவின் மற்றும் அபர்ணா இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீபக் பரம்போலை நடிகர் அபர்ணா தாஸ் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இன்று பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த இளம் ஜோடியின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மதுபோதையில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய பாடகர் வேல்முருகன் கைது..!!

More in Uncategorized

To Top