Connect with us

தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கும் அதிமுக…எடப்பாடியின் அடுத்த திட்டம் இதுதான்..

Politics

தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கும் அதிமுக…எடப்பாடியின் அடுத்த திட்டம் இதுதான்..

அதிமுக என்ற மாபெரும் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி தொடர்ந்து நீடித்து வருகிறது…இன்று வரை இதன் பிரச்சனை இருந்து வருகின்றது..

இப்படி இருக்கும் நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க்ப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்த வருகிறார்…

மேலும் கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுடன் இருந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து இபிஎஸ் தேர்தலில் புதிய அணியோடு களம் கான திட்டம் வகுத்து வருகிறார் அதற்கான நிறைய திட்டங்களை செயல் படுத்தி வருகின்றனர் அதற்கு ஏற்றார் போல் மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் கூறியுள்ளார். இந்தநிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகபொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் பூத் கமிட்டி இளைஞர்,இளம் பெண்கள் மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கின்றது…

நம்முடைய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மாளிகையில் நாளை (21.11.2023) மாலை 4 மணிக்கு நடைபெறும் என சொல்லப்பட்டு இருக்கின்றது….இந்த கூட்டத்தில் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் தேர்தல் பணியை தொடங்குவது அடுத்து கூட்டணி வைப்பது என கட்சியின் அடுத்தடுத்த திட்டத்தை செயல் படுத்த எடப்பாடி மும்முரம் காட்டுவது இதன் மூலம் தெரிகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

More in Politics

To Top