Connect with us

இந்தியன் 2-வின் எதிர்மறை விமர்சனங்களால் கடுப்பான பாபி சிம்ஹா என்ன சொன்னார் தெரியுமா..?

Cinema News

இந்தியன் 2-வின் எதிர்மறை விமர்சனங்களால் கடுப்பான பாபி சிம்ஹா என்ன சொன்னார் தெரியுமா..?

இந்தியன் 2 படத்திற்கு வரும் எதிர்மறை விமர்சனங்களை கண்டு கொந்தளித்துள்ள நடிகர் பாபி சிம்ஹா இதுகுறித்து காரசாரமான கருத்தை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 28 வருடங்களுக்கு பின் உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா , எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்துள்ளது .

லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார் .

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த 12 ஆம் வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே எதிர்மறையான விமர்சங்களை சந்தித்து வரும் நிலையில் படக்குழு சற்று மனஉளைச்சலில் உள்ளது.

இந்நிலையில் இந்த திர்மறை விமர்சனங்களை கண்டு கொந்தளித்துள்ள நடிகர் பாபி சிம்ஹா இதுகுறித்து காரசாரமான கருத்தை தெரிவித்துள்ளார்.

“எல்லாருமே தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் நல்லா இருக்கு என சொன்னால் நம்மை முட்டாள் என நினைத்துவிடுவார்களோ.. என எண்ணிக்கொண்டு சும்மா நொட்டு சாக்கு சொல்லும் வகையில் ஏதோ ஒன்றை பேசி வருகிறார்கள். அந்த அறிவாளிகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை” என நடிகர் பாபி சிம்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக்பாஸ் வீட்டில் அரோரா – இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் செய்தோர் எதிர்பாராத அதிர்ச்சி!

More in Cinema News

To Top