Connect with us

“G Squad: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த அவதாரம்!!”

Cinema News

“G Squad: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த அவதாரம்!!”

இன்று தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் நம்பிக்கையாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான அவர் ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் உச்சம் தொட்டு விக்ரம் என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

அதனை தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் LEO. இந்தப்படம் வசூலில் பெரிய உயரத்தை அடைந்த போதும், கடுமையான விமர்சனங்களை பெற்றது.

அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்கப்போகும் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் லோகேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “5 படங்களை டைரக்ட் செய்திருக்கும் நான், அடுத்ததாக ‘G squad’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன்.

முதற்கட்டமாக என்னுடைய நண்பர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோரின் ஐடியாக்களை படமாக எடுக்க இருக்கிறேன். உங்களுடைய ஆதரவை வழக்கம் போல தர வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

‘Keep Calm and wait for the update of our first production venture’ என LEO ஸ்டைலில் அவர் கூறி இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டப்பிங் முடிந்தது! செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’

More in Cinema News

To Top