Connect with us

“Captain Miller படம் மொத்தம் 3 பாகங்களாக வரும்..! Secrets சொன்ன இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!”

Cinema News

“Captain Miller படம் மொத்தம் 3 பாகங்களாக வரும்..! Secrets சொன்ன இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!”

வாத்தி படத்தின் தோல்விக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அருண் ஏற்கனவே ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். இளம் தலைமுறை இயக்குநர்களில் அருண் மாதேஸ்வரனின் மேக்கிங்கும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கிறது. எனவே தனுஷுடன் அவர் சேர்ந்திருக்கும் கேப்டன் மில்லர் கண்டிப்பாக வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இப்படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பீரியட் ஜானரில் உருவாகியிருக்கும் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது ட்ரெய்லரை பார்க்கையில் உறுதியாகிறது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான் படமும் களமிறங்குவது கவனிக்கத்தக்கது.

படம் ரிலீஸாவதற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அந்த பாகங்களில் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருப்பது படத்தின் இரண்டாம் பாகம்தான். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முதல் மற்றும் மூன்றாவது பாகங்கள் சீக்வெல்லாக எடுக்கப்படும்.

கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் மொத்தம் 120 நாட்கள் நடந்தது. அதில் 75 நாட்கள் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்குவதற்கு மட்டுமே செலவானது. இதில் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட 1000 நபர்களை கொண்ட ஸ்டண்ட் காட்சி ஒன்று படத்தில் இருக்கிறது. அது அவரது மாஸ்டர் பீஸாக அமைந்திருக்கிறது. அந்தக் காட்சி கண்டிப்பாக படத்தின் ஹைலைட்டாக இ ருக்கும். கேப்டன் மில்லர் பீரியாடிக் ஜானரில் உருவாகியிருக்கிறது. அதில் 5 சதவீதம் மட்டும்தான் செயற்கையான லைட்டிங்கை பயன்படுத்தியிருக்கிறேன். மற்ற அனைத்துமே இயற்கையான வெளிச்சத்தையே பயன்படுத்தியிருக்கிறேன்” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சருக்கு சவால் விட்ட அன்புமணி..!!

More in Cinema News

To Top